மனித உடலின் அமைப்பு மற்றும் அவைகளின் செயல்பாடுகள்
மனித உடலின் அமைப்பு மற்றும் அவைகளின் செயல்பாடுகள்
மனித
உடலானது எலும்புகளினாலான கட்டமைப்பில் தசைகளும் பல்வேறு உறுப்புகளும்
சேர்த்து ஆனது ஆகும். முதலுதவி செய்பவருக்கு மனித உடல் மற்றும் உறுப்புகள்
பற்றி முழுமையாக தெரியாவிட்டாலும் ஒரளவிற்கு அவற்றின் அமைப்பு மற்றும்
செயல்பாடுகள் தெரிந்தால் ஆபத்துக் காலங்களில் முதலுதவி அளிப்பது எளிதாக
இருக்கும்.
மனித எலும்புக் கட்டமைப்பு
மனித
உடலானது 206 எலும்புகளாலான ஒரு கட்டமைப்பு ஆகும். இதில் மண்டை ஒடு,
முதுகெலும்புகள், மார்பெலும்புகள், இடுப்பெலும்புகள் மேல் மற்றும் கீழ்
எலும்புகள் எனப் பலவகைப்படும்.
தசைகள்
எலும்புகள்
போல் அல்லாமல் தசைகள் மிருதவானவை. எலும்புகளின் மேலே கட்டமைப்பில் மேல்
அமையப்பட்டிருக்கும் தசைகள் மனித உடலுக்கு ஒரு உருவத்தைக் கொடுக்கிறது. இவை
இரண்டு வகைப்படும்.
- நமது இச்சைக்குட்பட்டு செயல்படும்
- தானாகவே செயல்பட்டு கொண்டிருக்கும்.
அதாவது இருதயம் போன்ற அவயங்களில் உள்ள தசைகள் அணிச்சா தசைகள் ஆகும். இவை
தானாகச் செயல்படும். மூட்டுக்களைச் சுற்றியுள்ள தசை நார்கள்
பாதிக்கப்பட்டால் அதற்கு சுளுக்கு என்று பெயர்.
நரம்புகள்
மூளையிலிருந்துப் பெறப்படும் கட்டளைகளை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்வது நரம்பு மண்டலம் ஆகும்.
தோல்
எலும்பு,
தசை மற்றும் உடல்உறுப்புக்களை வெளிப்புறத்தில் மூடியுள்ள தோல், மனித
உடம்பில் உணர்ச்சிகளை உறுப்புக்களுக்குத் தெரிவிக்கும் முக்கிய
பகுதியாகும்.
உடலின் உள் உறுப்புகள்
இவை
தவிர மூளை, இதயம், மூச்சுக்குழல், நுரையீரல், கல்லீரல், மண்ணிரல், உணவு
சீரமைப்பு மண்டலம், சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க உறுப்புக்கள் மனித
உடலில் அமையப் பெற்றுள்ளன. முதலுதவி செய்பவருக்கு மேற்கண்ட முக்கிய
உறுப்புக்கள் உடலில் எப்பகுதியில் இருக்கின்றன என்பதைத் தெரிந்து
வைத்திருத்தல் அவசியம்.
நம் உடலின் உள்உறுப்புகள் அமைப்பின் முறைகள்:
வாயின்
உட்புறத்தில் கழுத்துப் பகுதியில் தொண்டையும் மார்புக்கூட்டின்
மேற்பகுதியில் இடது வலது நுரையீரல்களும் மார்பின் நடுப்பகுதியில் இருதயமும்
வலது பக்கம் கல்லீரல் வலதுபக்கம் மார்பு பகுதிக்கு சற்று கீழே மண்ணிரல்
இரைப்பை மற்றும் வயிற்றுப்பகுதியில் பெரும்பகுதியை பெருங்குடலும்
சிறுகுடலும் நிரப்பி உள்ளது. இடுப்பின் மேல் பாகத்தில் முதுகெலும்புக்கு
பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு சிறுநீரகத்துக்கும் சிறுநீர்ப்பை இடுப்பு
எலும்பின் முன்பாகத்தில் கீழ்மட்டத்தில் உள்ளன. இவை தவிர இனப்பெருக்க
உறுப்புகள் மற்றும் சிறுநீர்ப்பையும் அமைந்துள்ளன.
உடலில் நடக்கும் செயல்பாடுகள்:
உடலுக்குள்
ஏற்படும் செயல்பாடுகளுக்கும் அதனால் ஏற்படும் மாற்றங்களையும் குறித்து
தெரிவிக்கும் பகுதிக்கு உடல் வினையியல் என்று பெயர். நமது உடலின் பல
தனித்தனி பாகங்களும் செயல்பாடுகளும் ஏற்படுகின்றன. அவ்வாறான பாகங்களுக்கு
"அவயம்" என்றும் அதன் வேலைகளுக்கு "செயல்பாடுகள்" என்றும் பெயர். உடலின்
முக்கிய வேலைகளான சுவாசித்தல், இரத்த ஓட்டம், செரிமானம், கழிவுப்பொருட்களை
வெளியேற்றுதல் போன்றவைகளை சில அவயங்களை ஒருங்கிணைந்து செயல்பட வைக்கின்றன.
உதாரணமாக உணவை செரிமானம் செய்ய வாய், உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல்,
கணையம், குடல்கள், போன்ற அவயங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றது.
உயிர்வளி
உயிர்வளி
உயிர்வாழ இன்றியமையாததாகும். இது நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து
கிடைக்கும். நாம் உண்ணும் உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதப்பொருட்கள்
இரத்தச் சிவப்பணுக்களால் சேர்க்கப்பட்டு இரத்தத்தோடு நுரையீரலுக்கு
செல்லும்போது அங்கு சுவாசித்தலினால் கிடைக்கும் உயிர்வளியைக் கிரகித்து
கொண்டு மீண்டும் இருதயத்திற்கு வந்து உடம்பின் எல்லா பாகங்களிலும் உள்ள
உயிர் அணுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. உடலில் உள்ள
உயிரணுவுக்கும் திசுக்களுக்கும் இரத்தத்தின் மூலமாக பிராணவாயுவும்,
உணவுப்பொருள்களிலிருந்து கிடைக்கும் சத்துப் பொருள்களினாலும்,
உயிரணுக்களுக்கும் திசுக்களும் வளரவும், வெப்பம் சக்தி உண்டாக்கவும்
உதவுகின்றது.
இருதயம்
இருதயம்
என்னும் அவயம் உட்குழிவோடு இரண்டு நுரையீரல்களுக்கு மத்தியில்
மார்புக்கூட்டில் உள்ளது. அது ஒரு "பம்ப்" போல் வேலை செய்கின்றது. அது
நான்கு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உடம்பின் எல்லா பாகங்களிலிருந்து
வரும் கரியமில வாயு நிறைந்த இரத்தம் சிரைகள் மூலம் இருதயத்தின் வலது
மேலறையில் கொட்டுகிறது. இருதயம் சுருங்கும் போது வலது மேலறையிலிருந்து வலது
கீழறைக்கு இரத்தம் வருகின்றது. அங்கிருந்து நுரையீரல்களுக்கு
அனுப்பப்படுகின்றது. நுரையீரலில் இரத்தம் கரியமிலவாயுவை வெளியேற்றி விட்டு
புதிதாக பிராணவாயுவை உள்ளிழுத்துக் கொள்கிறது. சுத்தமடைந்த இரத்தம் இடது
மேலுறையை வந்தடைகின்றது. மேலறை சுருங்கும்போது கீழறைக்கு தள்ளப்பட்டு
அங்கிருந்து உடம்பின் எல்லா பாகங்களுக்கும் விசையோடு தமணிகள் தந்துகிகள்
மூலமாக எடுத்துச் செல்லப்படுகின்றது.
நாடித்துடிப்பு
ஒவ்வொரு
முறையும் இருதயம் சுருங்கி இரத்தத்தை விசையோடு வெளியே தள்ளும் போது
இரத்தமானது தமணிகளைப் பெருக்கமடையச் செய்கின்றது. இந்த பெருக்கம் இரத்தம்
தமணியில் ஓடுகின்ற இடங்களில் காணப்படும். இந்த இரத்த அலைகளை தோலுக்கு
அருகாமையில் உள்ள தமணிகளில் உணர முடியும். அதுவே "நாடித்துடிப்பு"
எனப்படும். சாதாரணமாக நாடித்துடிப்பு கையின் மணிக்கட்டுப் பகுதியில்
உணரப்படுகின்றது. இதே போன்று கழுத்து, கன்னத்தின் மேல்பாகம், தொடையும்
அடிவயிறும் சேருமிடம் மற்றும் கணுக்கால் போன்ற பகுதிகளில் உணரமுடியும்.
சராசரி வயதுடைய ஒருவருக்கு ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிப்பினை
உணரமுடியும்.
No comments:
Post a Comment